P U N G U D U T I V U

THAKAVAL ARANGAM

Periyorkal

Posted on December 29, 2009 at 11:22 PM

பெரியோர்கள் 1

பொன.கனகசபை --வித்துவான் -ஆன்மிகம்

சி.ஆறுமுகம் --வித்துவான் - கல்வி

என்.எ.வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர்

சு-வில்வரத்தினம் அதிபர்- கல்வி

க.செல்வரத்தினம் அதிபர் -கல்வி இலக்கியம் கலை

ப.கதிரவேலு- வழக்கறிஜர் -அரசியல்

கணபதிபிள்ளை கந்தையா --அதிபர்-கல்வி -சமூகசேவை

க.செல்லத்துரை -மு.கி.ச.தலைவர்

சி.கணபதிபிள்ளை- வைத்திய விற்பன்னர்

பேராயர் டேவிட் ஜெயரத்தினம் அம்பலவாணர்

சி.இ.சதாசிவம்பிள்ளை -கல்வி

சி.சரவனமுத்துசுவாமிகள் -சிவதொண்டர்

பண்டிதர் சி.சரவணார் -ஆன்மீக போதகர்

கு.வி.செல்லத்துரை - அதிபர்-மு.தலைவர்-அகில இ.தா.ஆ.சங்கம்

மா.முருகேசு -உடையார்

க.ஐயாத்துரை- கல்வி-ஆன்மிகம் -சமூகசேவை

பே-கார்த்திகேசு - கி.ச.உபதலைவர் .இருபஈட்டி.ச.ச.நி.ஸ்தாபகர்

வி.கே.குணரத்தினம் வைத்தியர்

நா.கணேசராசகுருக்கள்---சமயம்

சே.சிவசுப்ரமனியாகுருக்கள்-சமயம்

க.முத்துதம்பி -அதிபர்-கல்வி

கு.வி.தம்பிதுரை மு-கி-ச-தலைவர்

க.தாமோதரம்பிள்ளை- கல்வி-சங்கீதம்

தம்பிள்ளை -வைத்தியர்

எ-குழந்தைவேலு -சமூகசேவை-ஆன்மிகம்

இராமச்சந்திர ஐயர் -சமயம்

மார்கண்டு சோதிநாதர்--ஆன்மிகம்

இ.கேங்கதரகுருக்கள்-சமயம்

சு.பரராசசிங்கம்- சமூகசேவை அரசியல்

வீ.வ.நல்லதம்பி-அதிபர்-கல்வி-அரசியல்

நக-பத்மநாதன்- எழுத்தாளர்

க.ஸ்ரீ ச்கந்தராச .--எழுத்தாளர் (சித்ரா மணாளன்;)

சி.க.நாகேசு -சமூகசேவை அரசியல்

போ.நாகேசு-சமூகசேவை -அரசியல்

சி.சின்னதுரை -கல்வி

க.சிவராமலிங்கம்- அதிபர்-கல்வி-இலக்கியம் கலை

இ.குலசேகரம்பிள்ளை -கல்வி-சமூகசேவை

க.thiyaakaraachaa --கல்வி-சமூகசேவை

Categories: None

Post a Comment

Oops!

Oops, you forgot something.

Oops!

The words you entered did not match the given text. Please try again.

Already a member? Sign In

0 Comments

Categories

புங்குடுதீவு

2008

புங்குடுதீவின் கதை

இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.

பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.

1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பொ. ரகுபதி, காரைநகரிலுள்ள களபூமியில் பெருங்கற்பண்பாட்டுச் சின்னங்கள் சிலவற்றகை; கண்டு பிடித்தார்.

இத்தகைய சின்னங்கள் புங்குடுதீவின் வடபகுதியில் உள்ள ஊரைதீவிலும் காணப்படுகின்றன.

இங்கு வட்டக்கற்களாலான சிறு கிணறுகள் தென்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஊரைதீவிலுள்ள ஐயனார் ஆலயம் பழமை வாய்ந்தது. இது இப்பொழுது சிவாலயமாக மாறிவிட்டது. இவ்வாலயத்திலுள்ள கருங்கற் து}ண், லிங்கம் என்பன வளர்வதாக கூறப்படுகிறது. இவ்வாலயத்துக்கு வடக்கே உள்ள கடற்கரையில் வட்டக்கற்களினாலான இரண்டு கிணறுகள் இருக்கின்றன.

சேர சோழ பாண்டிய மண்டலங்களோடு ஈடமண்டலமும் ஒன்றாகும். சேர சோழ பாண்டிய மண்டலங்களிலிருந்தும் சனங்கள் ஈழமண்டலத்தில் குடியேறினர், என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நு}லில் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதியுள்ளார்.

காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மக்கள் தீவுப்பகுதிகளில் குடியேறினர். தென்னிந்திய மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்துக்குக் காலம் பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

தனிநாயக முதலி பரம்பரையினரை உதாரணமாகக் கொள்ளலாம். புங்குடுதீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்தமைக்குப் பல சான்றுகள் உள்ளன. நெடுந்தீவில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன.

புங்குடுதீவின் பழைய துறைமுகமான புளியடித்துறைக்கு அருகிலும் பெருக்கு மரங்கள் காணப்பட்டன.

இம்மரங்கள் அரேபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன. எனவே அரேபியர் இத்தீவுகளுக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர் எனலாம்.

தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுவதால் புங்குடுதீவில் சோழகனோடை, சோழன்புலம், பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.

தமிழகத்திலே (கி.பி. 9 ஆம் நு}ற்றாண்டு முதல் 12 ஆம் நு}ற்றாண்டு வரை;) மேலாதிக்கம் பெற்ற சோழர் பெருமன்னர்கள் சுமார் ஒரு நு}ற்றாண்டிற்கு இலங்கையின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

இக்கால கட்டத்தில் இந்து சமயம் இங்கு மேலோங்கியிருந்தது எனலாம்.

தமிழ்நாட்டிலே ஆதிக்கம் பெற்ற இரண்டாவது பாண்டிய பேரரசு காலத்திலே அவர்களின் ஆதரவுடன் அவர்களின் தளபதிகளில் ஒருவன் ஆரியச்சக்கரவத்தி தலைமையில் யாழ்ப்பாணத்தில் தமிழரசு ஒன்றை உருவாக்கி கி.பி. 1250 முதல் பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

இக்காலப் பகுதியில் இந்தசமயச் செல்வாக்கு தீவகத்தில் மேலோங்கியது எனலாம்.

இதன் பின்பு போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டது. முன்னைய அரசரின் ஆட்சிக்காலங்களிலும் இந்து சமயம் நலிவுற்றது.

பிரித்தானியர் காலத்தில் பொதுவாக சமய சுதந்திரம் நிலவியது எனலாம். ஆதி காலம் தொடக்கம் கிரேக்க உரோம, அராபிய, சீனத் தொடர்புகள் இலங்கையுடன் ஏற்பட்டது. இந்தியாவின் தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம், கலிங்கம் மற்றும் வட இந்திய தொடர்புகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான தொடர்புகள் ஏதோ வகையில் தீவகத்திலும் ஓரளவாவது நிலவி வந்தமைக்கு சில இடப்பெயர்கள் சான்று பகர்கின்றன.

பல்லதீவு, பல்லவன்புலம் போன்ற இடப்பெயர்கள் பல்லவத் தொடர்பையும் சோழன்புலம், சோழகனோடை போன்றவை சோழத் தொடர்புகளையும் மாறன்புலம், பாண்டியன் வளவு போன்றவை பாண்டியத் தொடர்பையும், கலிங்கன்புலம், கலிங்கராயன் வளவு போன்றன கலிங்கத் தொடர்பையும் செட்டிவளவு, செட்டியர் தோட்டம் என்பவை செட்டிகளின் தொடர்புகளையும் பணிக்கன்புலம், போன்றவை கேரளத் தொடர்பையும் சீனன்புலம், சாவகன் வளவு போன்றவை முறையே சீனத் தொடர்பையும் சாவகத் தொடர்பையும் காட்டுகின்றன.

புங்குடுதீவில் 90 சதவீதம் இந்துக்களே வாழுகின்றனர். தீவின் நடுப்பபுதியில் குறிப்பிட்டளவு கிறிஸ்தவர்களும் வாழுகின்றனர். பண்டைக்காலம் தொட்டு இந்தியாவின் தென்கோடியில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்து வந்த பரதவர்கள் 1534 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த போர்த்துக்கல் அரசனால் மதம் மாற்றப்பட்டு கிறிஸ்தவர்களாக்கப்பட்டனர்.

எனினும் கிறிஸ்தவ அறிவைப் போதியளவு கொண்டிராத நிலையில் வாழ்ந்து வந்தனர். இக்கால கட்டத்தில் புனித பிரான்ஸிஸ் சவேரியாரின் வருகையானது மிகப் பெரிய மாறுதலை பரதவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. ஊக்கத்தையும் உழைப்பையும் மையமாகக் கொண்டு செயலாற்றிய புனிதரின் சேவை மிகு போதகம், அவர்கள் வாழ்ந்து வந்த பாதையைச் சீர் செய்தது.

1545 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பரதவ கிறிஸ்தவர்களுக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன.

இதனால் இவர்கள் தமது தாயகத்தை விட்டு தப்பியோட முனைந்தனர். கொந்தளிக்கும் அலைகடலையும் குமுறிவரும் காற்றையும் துச்சமென மதித்து வெளியேறிய இச்சமூகத்தினர் இலங்கையின் வடபாலுள்ள பல தீவுகளில் குடியேறினர்.

இவர்களில் ஒரு பகுதியினர் புங்குடுதீவில் தென்கீழ் முனையிலும் இறங்கிக் குடியேறினர்.

சில காலம் செல்லத் தீவின் மத்திய பகுதியில் ஆலமரங்களும் பற்றைகள், புதர்களும் நிறைந்த இடத்தில் புனித சவேரியாரின் ஆலயத்தை அமைத்தனர். பின்பு அதன் சூழலில் வாழத் தொடங்கினர். இவ்வாறே புங்குடுதீவின் வேறு சில பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் வாழத் தொடங்கினர்.

அதனை புங்கு 10 உடுதீவு எனப்பிரித்து புங்கமரம் நிறைந்த தீவு எனப்பொருள் கூறலாம். புங்கமரம் நெய்தல் நிலத்துக் கருப்பொருள்களுள் ஒன்று எனப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கூறியிருக்கிறார்.

.ALBUM

.

புங்குடுதீவு

அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமேற்கே அமைந்துள்ள சப்ததீவுகளில் ஒன்றான புங்குடுதீவுக் கிராமம் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இத்தீவானது ஏனைய தீவுகளால் சூழப்பட்டுள்ளதுடன் 11.2 சதுர மைல் பரப்பளவினைக் கொண்டுள்ளது.

பாய்க்கப்பலின் உருவத்தினைப் போன்ற நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ள இத்தீவானது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளதுடன் வேலணைத்தீவிலிருந்து ஆழம் குறைந்த 3 மைல் கடற்பரப்பினாற் பிரிக்கப்பட்டுள்ளது.

இத்தீவின் பிரதான நிலப்பரப்பு தவிர்ந்த ஊரதீவு பல்லதீவு கேரதீவு போன்ற சிறு தீவுகள் மழைக்காலங்களில் நீரினால் பிரிக்கப்பட்டும் கோடை காலங்களில் இணைந்தும் காணப்படுகின்றது.

1981ம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டின்படி 14 622 மக்கள் வாழ்ந்திருந்தனர்.

1991ம் ஆண்டு 17000 மக்கள் வாழ்ந்துள்ளனர் என மதீப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பௌதீக வளம

பௌதீக ரீதியாக புங்குடுதீவுக் கிராமத்தை நோக்கும் போது இத்தீவின் தென்கிழக்கே வீராமலைப்பகுதி உயரம் கூடிய பிரதேசமாகவும் வடமேற்கு நோக்கி படிப்படியாகத் தாழ்ந்து செல்வதைக் காணமுடிகின்றது.

மரி காலங்களில் வீராமலைப் பகுதி மற்றும் அதன் அயற் பகுதிகளிலிருந்தும் நீர் வழிந்தோடி கள்ளியாற்றுடன் சங்கமமாவதைக் காணமுடிகின்றது. இத்தீவின் தென்பகுதி உயரம் கூடியதாகவும் வடபகுதி தாழ்ந்ததாகவும் இருப்பதுடன் கேரதீவைச் சார்ந்த பகுதிகள் சதுப்பு நிலத்தை ஒத்த பண்புகளைக் கொண்டதாகவுள்ளன.

பொதுவாக இத்தீவின் சராசரி வெப்பநிலை 80′ பரணைற்றாகவும் வருடாந்த மழைவீழ்ச்சி 50″ க்கும் குறைவாக இருப்பதனாலும் வளம் குறைந்த நரைமண் தொகுதியே பெரும்பாலான பகுதிகளில் சிப்பி கலந்த மண்களிமண் ஊரிகலந்த மண் கொழுக்கிக்கல் கலந்த மண் என்பன காணப்படுகின்றன.

இத்தீவின் நீர் வளத்தினைப் பொறுத்தவரை 68.0 சதவீதமான கிணறுகளில் உவர்த்தன்மை கொண்ட நீரே காணப்படுகின்றன என அண்மைக்காலங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நன்னீர் வளம் ஆங்காங்கே தொட்டத் தொட்டமாக காணப்படுகின்றது.

இதனால் மக்களது அன்றாட வாழ்வுப் பிரச்சினையில் நீர்வளப்பயன்பாட்டுத் தன்மை முக்கியமான இடத்தினைப் பிடித்துள்ளது.

வரலாற்று நோக்கு

புங்குடுதீவுக் கிராமத்தில் வரலாறு தீவகத்தின் வரலாற்றுடன் மட்டுமல்லாது. யாழ்ப்பாணக்குடாநாட்டுடனும் தென்னிந்தியாவுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றது.

வளவாய்ப்புகளைக் கொண்ட யாழ்ப்பாணக்குடா நாட்டுக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான மக்கள் போக்குவரத்தில் தீவுப்பகுதி உட்பட புங்குடுதீவு முக்கிய இடத்தில் அமைந்துள்ளமை தென்னிந்திய மக்களின் உள்வரவுக்கு உதவியிருக்கலாம்.

குறிப்பாக காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள பௌதீக மற்றும் அரசியல் மாற்றங்களால் மக்கள் இப்பகுதிகளில் வந்து வாழ்திருக்க நியாயம் உண்டு.

அதாவது தென்னிந்தியாவிலிருந்து வந்துள்ள மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்திற்குக் காலம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இது மட்டுமல்லாது இத்தீவு உட்பட ஏனைய தீவுகள் சர்வதேச வர்த்தக மையமாக இருந்துள்ளதைமக்கு பல்வேறு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஊதாரணமாக புங்குடுதீவு புளியடித்துறை என்ற தற்போது பயன்படுத்தப்படாத துறைமுகத்திற்கு அருகாமையில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன.

இம்மரங்கள் அராபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன என்பர். ஏனவே அராபியர் இத்தீவுக்கு வந்து வர்த்தகத்தில் டுபட்டிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

www.pungudutivu1.blogspot.com

Featured Products

No featured products

tamil radios